சிறுவர்களுக்கும் குடும்பத்திற்கும் ஏற்ற வீடியோக்களுக்கான சிறந்த நடைமுறைகள்

சிறுவர்கள் YouTubeல் ஆன்லைன் வீடியோவைப் பார்க்கும்போது, அவர்களால் புதிய ஆர்வங்களைக் கண்டறிய முடியும், அவற்றைக் கற்றுக்கொள்ள முடியும், மற்றவர்களுடன் இணைந்து குழுவாகப் பணிபுரியும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என நாங்கள் நம்புகிறோம். சிறுவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்றவாறு சிறந்த, ஈடுபாட்டை ஏற்படுத்தும், ஊக்கமளிக்கும் வீடியோக்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பது குறித்து கிரியேட்டர்கள் புரிந்துகொள்ள உதவுவதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

சிறுவர்கள் & குடும்பத்திற்கு ஏற்ற உள்ளடக்கத்திற்கான சிறந்த நடைமுறைகள் (உயர்ந்த & குறைந்த தரக் கொள்கைகள்)

இதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகச் சிறுவர்களுக்காகவும் குடும்பத்தினருக்காகவும் வீடியோக்களை உருவாக்கும் YouTube கிரியேட்டர்களுக்கு வழிகாட்ட, கீழே கொடுக்கப்பட்டுள்ள தரக் கொள்கைகளின் தொகுப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். குழந்தைகள் மேம்பாட்டு நிபுணர்களுடன் இணைந்து கூடுதல் ஆய்வின் அடிப்படையில் இந்தக் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மோசமான அல்லது சிறந்த தரமுடைய வீடியோக்களாகக் கருதப்படுபவை எவை என்பதைப் பற்றி இந்தப் பட்டியலில் இருந்து தெரிந்துகொள்ளலாம், இது முழுமையான பட்டியல் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பாதுகாப்பான பார்க்கும் அனுபவத்தை அனைவருக்கும் உருவாக்க உதவும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களுடன் கூடுதலான ஒரு துணைப் பகுதியே இந்தக் கொள்கைகள் ஆகும். நீள வடிவ வீடியோக்கள், YouTube Shorts ஆகிய இரண்டிற்கும் இவை பொருந்தும்.

சிறுவர்களுக்கு ஏற்ற YouTube Shortsஸை உருவாக்குவது பற்றிய சிறந்த நடைமுறைகள் குறித்து மேலும் அறிய, இந்த வழிகாட்டியைப் பாருங்கள்.

நீங்கள் உருவாக்கும் எல்லா வீடியோக்களும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்வது உங்கள் பொறுப்பாகும். இந்தப் பக்கத்தில் உள்ள கொள்கைகளைத் தொடர்ந்து நாங்கள் மறுமதிப்பீடு செய்து, அவற்றை மாற்றியமைப்போம்.

கவனத்திற்கு: YouTube Kids வீடியோக்களுக்கான எங்கள் உள்ளடக்கக் கொள்கைகளைப் பற்றி மேலும் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

சிறந்த தரமுடைய வீடியோக்களுக்கான கொள்கைகள்

உயர்தர வீடியோ குறிப்பிட்ட வயதினருக்கு ஏற்றதாகவும், மேம்பட்டதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்க வேண்டும். இந்த வீடியோ வெவ்வேறு வடிவமைப்புகளில் இருக்கலாம், பல்வேறு வகையான தலைப்புகளின் கீழ் விஷயங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அது பின்வரும் விஷயங்களை ஊக்கப்படுத்த வேண்டும்

  • நல்ல மனிதராக இருத்தல்: மரியாதை, நன்னடத்தை, நல்ல பழக்க வழக்கங்களை இந்த வீடியோ காட்ட வேண்டும் அல்லது அவற்றை ஊக்குவிக்க வேண்டும். உதாரணம்: நல்ல நண்பர்களாக இருப்பது, பகிர்ந்தளிப்பது போன்ற வீடியோக்கள். பல் துலக்குதல், காய்கறிகள் சாப்பிட குழந்தைகளை ஊக்குவித்தல் போன்ற வீடியோக்களும் இதில் உள்ளடங்கும்.
  • கற்றல் மற்றும் ஆர்வத்தைத் தூண்டுதல்: பகுத்தறிவுடன் யோசித்தல், தொடர்புடைய கருத்துகளை விவாதித்தல், உலக விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வீடியோக்கள். வீடியோக்கள் குறிப்பிட்ட வயதினருக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும், சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் வழக்கமான கற்றல் முறை முதல் வழக்கத்திற்கு மாறான கற்றல் முறை வரை இருக்கலாம் (உதாரணம்: முறைசார்ந்த கல்வி, முறைசாராக் கல்வி, ஆர்வத்தின் அடிப்படையிலான கண்டறிதல், பயிற்சிகள் ஆகியவை).
  • படைப்பாற்றல், விளையாட்டு, கற்பனைத் திறன் தொடர்பானவை: சிந்தனையைத் தூண்டும் அல்லது கற்பனையை மேம்படுத்தும் வீடியோக்கள். சிறுவர்களை அர்த்தமுள்ள வகையிலும் வித்தியாசமான முறையிலும் எதையாவது உருவாக்கவோ ஈடுபடவோ ஊக்கப்படுத்தும் வீடியோக்களாகவும் இருக்கலாம். உதாரணம்: கற்பனை உலகங்களை உருவாக்குதல், கதை சொல்லுதல், கால்பந்து விளையாட்டுக்கான உத்திகள், குழுவாக ஒன்றிணைந்து பாடுதல், படைப்பாற்றலை வெளிப்படுத்தும் செயல்பாடுகள் (கலை, கைவினைப் பொருட்கள் போன்றவை).
  • உலகப் பிரச்சனைகள்குறித்துப் பேசுதல்: வாழ்க்கைப் பாடங்களையும் வலிமையான கதாபாத்திரங்களையும் காட்டும் வீடியோக்கள் அல்லது சமூக உணர்வுத் திறன்கள், சிக்கல்களைத் தீர்த்தல், சுயமாகச் சிந்திக்கும் திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வீடியோக்கள் இதில் உள்ளடங்கும். இதில் பெரும்பாலும் முழுமையான வர்ணனை (கதாபாத்திரத்தின் உருவாக்கம், கதைக்களம், தீர்வு போன்றவை), அதிலிருந்து கற்றுக்கொள்ளும் தெளிவான விஷயமோ பாடமோ இருக்கும்.
  • பன்முகத்தன்மையுடையது, சமத்துவமானது மற்றும் அனைவருக்கும் ஏற்றது: மாறுபட்ட கண்ணோட்டங்களையும் பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பங்கேற்பையும் கொண்டாடுகின்ற, ஊக்குவிக்கின்ற வீடியோக்கள் இதில் அடங்கும். பல்வேறுபட்ட வயது, பாலினம், இனங்கள், மதங்கள் மற்றும் பாலியல் நாட்டம் கொண்டவர்களைக் காட்சிப்படுத்தும் வீடியோக்கள். அத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும் எல்லோரும் சமம் என்பதை அறிவுறுத்தக்கூடியதாகவும் இந்த வீடியோக்கள் இருக்க வேண்டும். உதாரணங்கள்: பன்முகத்தன்மை, ஒன்றாக இணைந்து வாழ்தல் குறித்த பலன்களை விவாதிக்கின்ற வீடியோக்கள் அல்லது இந்தக் கருப்பொருட்களை விளக்கும் கதைகள்/கதாபாத்திரங்களைக் காட்டுகின்ற வீடியோக்கள்.

குறைந்த தரமுடைய வீடியோக்களுக்கான கொள்கைகள்

குறைந்த தரமுடைய வீடியோக்களை உருவாக்குவதைத் தவிர்க்கவும். குறைந்த தரமுடைய வீடியோ என்பது:

  • மிகவும் தொழில்ரீதியிலானவை அல்லது விளம்பரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை: தயாரிப்புகளை வாங்கச் செய்வதற்கோ பிராண்டுகளையும் லோகோக்களையும் (பொம்மைகள், உணவு போன்றவை) விளம்பரப்படுத்துவதற்கோ அதிக முக்கியத்துவம் அளிக்கும் வீடியோக்கள். மக்களின் வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வீடியோக்களும் இதில் உள்ளடங்கும்.
  • தவறான நடத்தைகள் அல்லது அணுகுமுறைகளை ஊக்குவித்தல்: ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபடுவது, பொறுப்பற்ற முறையில் இருப்பது, மிரட்டுவது, நேர்மையின்மை, பிறருக்கு மரியாதை கொடுக்கத் தவறுவது போன்றவற்றை ஊக்குவிக்கும் வீடியோக்கள். உதாரணமாக, ஆபத்தான/பாதுகாப்பற்ற குறும்புச் செயல்கள், ஆரோக்கியமற்ற உண்ணும் பழக்கங்கள் போன்றவற்றை ஊக்குவிப்பவை.
  • கல்வி வீடியோக்கள் என ஏமாற்றுபவை: வீடியோவின் தலைப்பிலோ சிறுபடத்திலோ கல்வி தொடர்பானது எனக் காட்டிவிட்டு, உண்மையில் சிறுவர்களுக்கான வழிகாட்டுதலோ விளக்கமோ இல்லாத அல்லது அவர்களுக்குத் தொடர்பில்லாத வீடியோக்கள். உதாரணம்: தலைப்புகளிலோ சிறுபடங்களிலோ “வண்ணங்களை அறிந்துகொள்ளுங்கள்”, “எண்களை அறிந்துகொள்ளுங்கள்” எனப் பார்வையாளர்களுக்குக் காட்டிவிட்டு அதற்குச் சம்பந்தமில்லாத தவறான தகவல்களைக் கொண்டுள்ள வீடியோக்கள்.
  • புரிந்துகொள்வதைக் கடினமாக்குதல்: விஷயத்தை ஒருங்கிணைந்த வகையில் சொல்லாத, புரிந்துகொள்ள முடியாத மற்றும் சிந்தனையற்ற வீடியோக்கள் (எ.கா. ஆடியோ தெளிவின்றி இருப்பது) குறைந்த நேரத்தில் அதிக வீடியோக்களை உருவாக்குவது, தானாக வீடியோக்களை உருவாக்குவது போன்றவை பெரும்பாலும் இந்த வகை வீடியோவிற்குக் காரணமாக உள்ளன.
  • பரபரப்பை ஏற்படுத்துதல் அல்லது தவறாக வழிநடத்துதல்: உண்மையற்ற, மிகைப்படுத்தப்பட்ட, விசித்திரமான, பிறரது கருத்துகளின் அடிப்படையிலான மற்றும் சிறுவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற வீடியோக்கள். “முக்கியச் சொற்களை நிரப்புதல்” அல்லது சிறுவர்களைக் கவரும் பிரபலமான முக்கியச் சொற்களை மீண்டும் மீண்டுமோ திருத்தியோ மிகைப்படுத்தியோ பயன்படுத்தும் வீடியோக்களும் இதில் உள்ளடங்கும். முக்கியச் சொற்களை அர்த்தமற்ற வகையில் பயன்படுத்துவதும் இதில் உள்ளடங்கும்.
  • சிறுவர்களின் கதாபாத்திரங்களை விசித்திரமாகப் பயன்படுத்துதல்: பிரபலமாக இருக்கும் சிறுவர்களின் கதாபாத்திரங்களை (அனிமேஷன் செய்யப்பட்டவை அல்லது நேரடிச் சித்தரிப்பு) ஆட்சேபிக்கத்தக்க சூழல்களில் சித்தரிக்கும் வீடியோக்கள்.

சேனலின் வரவேற்பில் ஏற்படும் தாக்கம்

சிறுவர்கள் மற்றும் குடும்பத்திற்கு ஏற்ற வீடியோக்களுக்கான தரக் கொள்கைகள் உங்கள் சேனலின் வரவேற்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என அமைக்கப்பட்ட உயர்தர வீடியோக்கள் பரிந்துரைகளில் அதிகக் கவனத்தைப் பெறும். அவை வீடியோக்களை YouTube Kidsஸில் சேர்ப்பது சேனலிலும் வீடியோவிலும் இருந்து வருமானம் பெறுவது ஆகியவை குறித்த முடிவுகளை எடுக்க வழிகாட்டும். “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என அமைக்கப்பட்ட வீடியோக்களில் குறைந்த தரம் என நாங்கள் குறிப்பிடும் வீடியோ வகைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும் சேனல் கண்டறியப்பட்டால் YouTube கூட்டாளர் திட்டத்தில் இருந்து அந்தச் சேனல் இடைநிறுத்தப்படலாம். இந்தத் தரக் கொள்கைகளை மீறும் தனி வீடியோ கண்டறியப்பட்டால் அதற்கான விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டுதல் குறைவாகவோ முற்றிலும் இல்லாமலோ போகக்கூடும்.

YouTubeல் சிறுவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்ற மேம்பட்ட, ஊக்கமளிக்கின்ற வீடியோக்களை உருவாக்க நீங்கள் ஒவ்வொருவரும் உதவுவீர்கள் என நம்புகிறோம்.

வீடியோக்கள் மற்றும் YouTube Shortsஸுக்கான தரக் கொள்கைகள்

 சிறுவர்கள் மற்றும் குடும்பத்திற்கு ஏற்ற வீடியோக்களுக்கான இந்தத் தரக் கொள்கைகள் நீள வடிவ வீடியோக்கள், YouTube Shorts ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16249169432534758263
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false