“சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” குறித்த பொதுவான கேள்விகள்

COPPA and YouTube: Answering Your Top Questions

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற YouTube கிரியேட்டர்களுக்கான சேனலில் குழு சேரவும்.

 

நீங்கள் எங்கிருந்தாலும் சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் மற்றும்/அல்லது பிற சட்டங்களுக்கு இணங்க வேண்டும். சிறுவர்களுக்கான வீடியோக்களை உருவாக்குகிறீர்கள் எனில் உங்கள் வீடியோக்கள் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை எங்களிடம் தெரிவிக்க வேண்டும். சிறுவர்களையும் அவர்களின் தனியுரிமையையும் பாதுகாப்பதற்காகவும் சட்டங்களுடன் இணங்குவதற்காகவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

தரவைச் சேகரிப்பது YouTube எனும்போது (கிரியேட்டர் இல்லை), இணங்குவதற்கான பொறுப்பு கிரியேட்டருக்கு உள்ளது ஏன்?

பல்வேறு சட்டங்களின் கீழ், சிறுவர்களின் தனியுரிமை விதிகளுக்கு இணங்குவதற்கான பொறுப்பு YouTube மற்றும் கிரியேட்டர்கள் இருவருக்குமே உள்ளது. உங்கள் வீடியோவைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள் என்பதால் வீடியோ சிறுவர்களுக்கானதா என்று நீங்கள் எங்களிடம் கூற வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். உங்கள் பார்வையாளர்களை நீங்கள் சரியாக அமைப்பீர்கள் என நம்புகிறோம். ஏதேனும் பிழையோ தவறான பயன்பாடோ இருந்தால் மட்டுமே உங்கள் பார்வையாளர் அமைப்பை மாற்றுவோம். நீங்கள் பார்வையாளர்களை அமைத்த பின்பு பார்வையாளர் அமைப்புடன் சீரமைக்க, அந்த வீடியோவில் உள்ள தரவை எவ்வாறு பயன்படுத்துகிறோம் மற்றும் சேகரிக்கிறோம் என்பதைக் கட்டுப்படுத்துவோம்.
என்னுடைய வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல என்று நான் எப்படித் தெரிந்துகொள்வது?
ஃபெடரல் டிரேடு கமிஷனின் (FTC) வழிகாட்டுதலின்படி உங்கள் வீடியோவில் உள்ள நடிகர்கள், கதாபாத்திரங்கள், செயல்பாடுகள், கேம்கள், பாடல்கள், கதைகள், பிற முக்கிய விவரங்கள் போன்றவை சிறுவர்களை மையப்படுத்தி இருந்தால் அது “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” ஆகும். இல்லையெனில் உங்கள் வீடியோவை “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” எனக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லாதிருக்கலாம்.
ஒரு வீடியோ இவ்வாறு இருப்பதால் மட்டும் இது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாகாது:
  • அனைவரும் பார்ப்பதற்கேற்றது அல்லது பாதுகாப்பானது (அதாவது “குடும்பத்திற்கேற்ற வீடியோ”)
  • பொதுவாகச் சிறுவர்களுடன் தொடர்புடைய செயல்பாட்டை உள்ளடக்கியது
  • சிறுவர்கள் தற்செயலாகப் பார்க்கக்கூடியது

சிறுவர்களை மையப்படுத்தி உள்ளதைப் பரிந்துரைக்கும் தகவல்கள் இல்லாத நிலையில் 'பொதுப் பார்வையாளர்களுக்கானது' என்று கருதக்கூடிய வீடியோ வகைகளுக்கான எடுத்துக்காட்டுகள்:

  • பொம்மைகளை ரீமேக் செய்வது, களிமண் உருவங்களை உருவாக்குவது போன்றவற்றைப் பொழுதுபோக்கு ஆர்வலர்களுக்குக் கற்பிக்கும் DIY வீடியோ
  • ஒரு பொழுதுபோக்குப் பூங்காவைச் சுற்றிப் பார்க்கும் அனுபவம் குறித்த குடும்ப வீடியோ பதிவு 
  • வீடியோ கேமில் மாற்றங்களைச் செய்வது குறித்த விரிவான வழிமுறைகளைக் கொண்ட வீடியோ 
  • சிறுவர்கள் பாடல்களைப் பெரியவர்கள் பாடும் நையாண்டி வீடியோ 
  • அனைவரையும் ஈர்க்கக்கூடிய அனிமேஷன் வீடியோ
  • பெரியவர்களுக்கான நகைச்சுவை உள்ள Minecraft வீடியோ 

உங்கள் வீடியோக்களையும் மேலே உள்ள காரணிகளையும் மதிப்பீடு செய்யும்போது உங்கள் வீடியோக்கள் எந்த வகையான பார்வையாளருக்கானவை என்பதைக் கவனமாகக் கருத்தில் கொள்ளுங்கள். 

“பொதுப் பார்வையாளர்கள்” வீடியோவும் “எல்லோருக்கும் ஏற்ற” வீடியோவும் ஒன்றா?
இல்லை. பொதுப் பார்வையாளர்களுக்கு ஏற்ற வீடியோ என்பது அனைவரையும் ஈர்க்கக்கூடிய வீடியோவாகும். இது குறிப்பாகச் சிறுவர்களையோ டீன் ஏஜரையோ பெரியவர்களையோ மையப்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ அல்ல. பொதுப் பார்வையாளர்களுக்கு ஏற்ற வீடியோ “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல” என அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.  

சிறுவர்களை மையப்படுத்தி உள்ளதைப் பரிந்துரைக்கும் தகவல்கள் இல்லாத நிலையில் 'பொதுப் பார்வையாளர்களுக்கானது' என்று கருதக்கூடிய வீடியோ வகைகளுக்கான எடுத்துக்காட்டுகள்:  
  • பொம்மைகளை ரீமேக் செய்வது, களிமண் உருவங்களை உருவாக்குவது போன்றவற்றைப் பொழுதுபோக்கு ஆர்வலர்களுக்குக் கற்பிக்கும் DIY வீடியோ
  • பொழுதுபோக்குப் பூங்காவைச் சுற்றிப் பார்க்கும் அனுபவம் குறித்துப் பிற பெற்றோருக்குக் கூறும் குடும்ப வீடியோ பதிவு 
  • அவதார்களை உருவாக்குவது அல்லது வீடியோ கேமில் மாற்றங்களைச் செய்வது குறித்த விரிவான வழிமுறைகளைக் கொண்ட வீடியோ
  • அனைவரையும் ஈர்க்கக்கூடிய அனிமேஷன் வீடியோ
  • பெரியவர்களுக்கான நகைச்சுவையைக் கொண்ட கேமிங் வீடியோ 
எல்லோருக்கும் ஏற்ற வீடியோவானது சிறுவர்களுக்கான வீடியோவின் ஒரு வகையாகவும் கருதப்படுகிறது. முதன்மை அல்லது பிரதானப் பார்வையாளர்களாகச் சிறுவர்கள் இல்லாதபோதிலும் இந்த வகை வீடியோக்கள் அதன் பார்வையாளர்களில் சிறுவர்களையும் இலக்கிடுகின்றன. மேலும் இவை மேலே விவரிக்கப்பட்டுள்ள காரணிகளைப் பூர்த்திசெய்து சிறுவர்களுக்கான வீடியோக்களாகத் தகுதிபெறுகின்றன.

எனது வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல என்ற பொறுப்புதுறப்பை நான் சேர்க்கலாமா?

உங்கள் வீடியோ 13 வயதுக்கு மேற்பட்ட பார்வையாளர்களுக்கானது எனக் குறிப்பிட்டு ஒரு பொறுப்புதுறப்பைச் சேர்ப்பதால் உங்கள் வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல என FTC தானாகவே கருதும் என்று அர்த்தமாகாது. இது நிச்சயமாக நீங்கள் விரும்பும் பார்வையாளர்களைத் தீர்மானிக்க உதவும் ஒரு காரணியாகும். ஆனால் பிற COPPA காரணிகளின் அடிப்படையிலேயே FTC இதை மதிப்பிடும், அவை பின்வருமாறு: 
  • குறிப்பாகச் சிறுவர்களைக் கவரக்கூடிய கதாபாத்திரங்கள், செயல்பாடுகள், கேம்கள், பொம்மைகள், பாடல்கள், கதைகள் அல்லது பிற விஷயங்கள் இருப்பது
  • உங்கள் வீடியோவுக்கான பார்வையாளர்கள் குறித்து நீங்கள் அளித்த பிற அறிக்கைகள் (எ.கா. தனிப்பட்ட இணையதளத்தில் வழங்கியவை) பொறுப்புதுறப்பில் இருந்து வேறுபட்டு இருப்பது

எனது பார்வையாளர்களின் வயதைக் கணிப்பதற்கான கருவிகள் என்னிடம் இல்லையென்றாலும் அதை நான் நிரூபிக்க வேண்டுமா? சிறுவர்கள் எனது வீடியோவைப் பார்க்கிறார்கள் என்பதற்கான ஆதாரமாக FTC எதைக் கருதுகிறது? 

உங்கள் பார்வையாளர்களின் வயது குறித்து உங்களிடம் இருக்கக்கூடிய எந்தவொரு ஆதாரமும் உங்கள் வீடியோவை “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என்று குறிப்பிடுவதற்கு நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகளில் ஒன்று மட்டுமே ஆகும். உங்கள் வீடியோவைச் சிறுவர்கள் பார்க்கிறார்களா என்பதைக் கண்டறிய உதவும் வகையில் YouTube பகுப்பாய்வுகள் (YTA - YouTube Analytics) வடிவமைக்கப்படவில்லை. உங்கள் பயனர்களின் வயது குறித்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் போன்ற தரவைக் கருத்தில் கொள்வது, உங்கள் வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க உதவும் என்று FTC அறிவுறுத்தியுள்ளது.
அமைப்பில் “எல்லோருக்கும் ஏற்றது” என்ற விருப்பத்தேர்வை YouTube ஏன் சேர்க்கவில்லை? 
பார்வையாளர்களை அமைக்கும் அம்சத்தை வடிவமைப்பதில், ஏற்கெனவே தெளிவற்ற இடத்தில் மேலும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” எனும் ஒரே ஒரு வகையை உருவாக்கி கிரியேட்டர்களுக்கான விருப்பத்தேர்வுகளை நெறிப்படுத்தியுள்ளோம். 'எல்லோருக்கும் ஏற்றது' என்ற வீடியோ வகையில் சில சிக்கல்கள் உள்ளன. கிரியேட்டர்களுக்கு (எல்லோருக்கும் ஏற்ற வீடியோக்களை உருவாக்கும் கிரியேட்டர்கள் உட்பட) சிறந்த தீர்வை உருவாக்கும் பொருட்டு, பொதுமக்களின் கருத்துகளை நாங்கள் FTCக்குச் சமர்ப்பித்துள்ளோம். 

சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறவில்லை மற்றும் அவை ஏன் இடம்பெறவில்லை? 

சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோவில் தற்போது இடம்பெறாத அம்சங்களை இங்கே பார்க்கலாம். இந்த அம்சங்களில் அனைத்துமோ பகுதியளவோ பயனர் தரவைச் சார்ந்திருக்கக்கூடும். சிறுவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும் சட்டத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என அமைக்கப்பட்ட வீடியோக்களில் தரவுச் சேகரிப்பையும் பயன்பாட்டையும் நாங்கள் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.

சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோவிலும் சிறுவர்களுக்காக உருவாக்கப்படாத வீடியோவிலும் பரிந்துரைகள் எவ்வாறு செயல்படும்? என்னுடைய வீடியோக்களைக் கண்டறிவது பாதிக்கப்படுமா?

பயனர்கள் பார்க்க விரும்பும் வீடியோக்களைக் கண்டறியவும் தாங்கள் விரும்பும் வீடியோக்களுடன் (“சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என அமைக்கப்பட்ட வீடியோக்கள் உட்பட) பயனர்களை இணைக்கவும் உதவுவதே YouTubeன் பரிந்துரைகள் சிஸ்டங்களின் நோக்கமாகும். பயனர்களுக்கு விருப்பமான வீடியோக்களை வழங்குவதற்கும் YouTubeல் அவர்களுக்குத் தரமான அனுபவத்தை வழங்குவதற்கும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என அமைத்த வீடியோக்கள் சிறுவர்களுக்கான பிற வீடியோக்களுடனேயே அதிகமாகப் பரிந்துரைக்கப்படக்கூடும். உங்கள் வீடியோ சரியான பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய, “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” அல்லது “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல” என்று உங்கள் வீடியோவைத் துல்லியமாக அமைப்பது மிகவும் முக்கியமாகும்.

இந்த வீடியோ பொருத்தமற்றதாகத் தெரிகிறது. “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என அமைக்கப்பட்ட காரணம் என்ன?

வீடியோ அல்லது சேனலின் பார்வையாளர் அமைப்பு “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என இருப்பது வீடியோக்களின் முதன்மைப் பார்வையாளர்கள் சிறுவர்கள் என்பதையோ அவை சிறுவர்களை மையப்படுத்தியவை என்பதையோ குறிக்கிறது. COPPA ஒழுங்குமுறையுடன் கிரியேட்டர்கள் இணங்குவதற்கு உதவ, “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என்று வீடியோவை அமைத்துக்கொள்ள முடியும்.

YouTubeல் உள்ள வீடியோக்களின் பொருந்தும் தன்மையைத் தீர்மானிப்பதற்கான சிஸ்டங்களும் எங்களிடம் உள்ளன. YouTubeல் அனுமதிக்கப்படும் மற்றும் அனுமதிக்கப்படாத உள்ளடக்கம் குறித்து YouTubeன் சமூக வழிகாட்டுதல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. YouTubeல் சிறுவர்களுக்கும் குடும்பங்களுக்கும் முடிந்த அளவிற்குச் சிறந்த பாதுகாப்பை வழங்க உதவும் தொழில்நுட்பத்திலும் பணியாளர் குழுக்களிலும் நாங்கள் முதலீடு செய்கிறோம். உதாரணமாக, குடும்பத்திற்கான வீடியோ என்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடிய வயது வந்தோருக்கான வீடியோக்களுக்கு நாங்கள் வயதுக் கட்டுப்பாட்டை விதிக்கிறோம். இத்தகைய வீடியோவின் தலைப்பு, விளக்கம், குறிச்சொற்கள் போன்றவற்றில் வயது வராதோரையும் குடும்பங்களையும் வெளிப்படையாக இலக்கிட்டால், அந்த வீடியோவையும் நாங்கள் அகற்றிவிடுவோம். YouTubeன் சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாக நினைக்கும் வீடியோக்களை நீங்கள் கண்டறிந்தால், புகாரளிப்பதற்கான அம்சத்தைப் பயன்படுத்தி அதை எங்கள் YouTube குழுவினர் மதிப்பாய்வு செய்வதற்காகச் சமர்ப்பிக்கலாம்.

“சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என அமைக்கப்படும் வீடியோக்கள் YouTube Kids ஆப்ஸில் சேர்க்கப்படுமா?

“சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என அமைக்கப்பட்ட வீடியோக்கள் தானாகவே YouTube Kids ஆப்ஸில் சேர்க்கப்படுவதில்லை. YouTube Kidsஸில் குறிப்பிட்ட வயதினருக்கான வீடியோக்கள் மட்டுமே இருப்பதையும், எங்கள் தரக் கொள்கைகளுடன் அவை இணங்குவதையும், உலகளவில் சிறுவர்களின் பரவலான விருப்பங்களை அவை பூர்த்திசெய்வதையும் எங்களின் உள்ளடக்கக் கொள்கைகள் உறுதிசெய்கின்றன. வீடியோக்கள் YouTube Kids ஆப்ஸுக்குப் பொருத்தமானதா என்பதைத் தீர்மானிப்பதற்கு நாங்கள் தானியங்கு வடிப்பான்கள், பயனர் கருத்துகள், நேரடி மதிப்பாய்வாளர்கள் என அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துகிறோம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7099014093669918979
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false