உங்கள் சேனல் அல்லது வீடியோவுக்கான பார்வையாளர்களை அமைத்தல்

நீங்கள் எங்கிருந்தாலும் சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் மற்றும்/அல்லது பிற சட்டங்களுக்கு இணங்க வேண்டும். சிறுவர்களுக்கான வீடியோவை உருவாக்குகிறீர்கள் எனில் உங்கள் வீடியோக்கள் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை என்பதை எங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

YouTube கிரியேட்டராக, எதிர்காலத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள வீடியோக்களைச் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை என்றோ சிறுவர்களுக்காக உருவாக்கப்படாதவை என்றோ அமைக்க வேண்டும். சிறுவர்களுக்கான வீடியோவை உருவாக்காத கிரியேட்டர்களும் தங்களின் பார்வையாளர்களை அமைக்க வேண்டும். உங்கள் வீடியோவுக்குப் பொருத்தமான அம்சங்களை நாங்கள் வழங்குவதை உறுதிசெய்ய இது உதவுகிறது.

Important Update for All Creators: Complying with COPPA

நீங்கள் இணங்குவதற்கு உதவ, YouTube Studioவின் பார்வையாளர் அமைப்புகளில் ‘சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை’ எனும் அமைப்பு உள்ளது. உங்கள் பார்வையாளர் அமைப்பைப் பின்வருமாறு அமைக்கலாம்:

  • மொத்தச் சேனலுக்கும் அமைக்கலாம்: ஏற்கெனவே இருக்கும் வீடியோக்கள் மற்றும் எதிர்காலத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் அனைத்தையும் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவையாகவோ சிறுவர்களுக்காக உருவாக்கப்படாதவையாகவோ அமைக்கும்.
  • அல்லது ஒவ்வொரு வீடியோவுக்கும் அமைக்கலாம்: இந்த விருப்பத்தைத் தேர்வுசெய்தால் ஏற்கெனவே இருக்கும் வீடியோக்கள் மற்றும் புதிதாகப் பதிவேற்றப்படும் வீடியோக்கள் ஒவ்வொன்றுக்குமான பார்வையாளர் அமைப்பைச் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை அல்லது சிறுவர்களுக்காக உருவாக்கப்படாதவை என்று அமைக்க வேண்டும்.

குறிப்பு:

  • பார்வையாளர்களைத் தேர்வுசெய்வதற்கான கருவியை மூன்றாம் தரப்பு ஆப்ஸிலும் YouTube API சேவைகளிலும் விரைவில் கிடைக்கப்பெறச் செய்வோம். சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோவைப் பதிவேற்ற தற்போதைக்கு YouTube Studioவைப் பயன்படுத்துங்கள்.

முக்கியம்: ஏன் ஒவ்வொரு கிரியேட்டரும் தங்களின் பார்வையாளர்களை அமைக்க வேண்டும்?

அமெரிக்க ஃபெடரல் டிரேடு கமிஷன் (FTC - Federal Trade Commission) மற்றும் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் உடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அத்துடன் சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (COPPA - Children’s Online Privacy Protection Act) மற்றும்/அல்லது பொருந்தக்கூடிய பிற சட்டங்களுடன் நீங்கள் இணங்குவதற்கும் இவை உதவும். நீங்கள் எந்த இடத்தில் வசித்தாலும் உங்கள் வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா இல்லையா என்பதை எங்களிடம் தெரிவிப்பது அவசியம். உங்கள் பார்வையாளர்களைச் சரியாக அமைக்கத் தவறினால் FTC அல்லது பிற அமைப்புகளுடன் இணங்குவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும், இதன் காரணமாக உங்கள் YouTube கணக்கின் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கக்கூடும். FTCயின் COPPA அமலாக்கம் குறித்து மேலும் அறிக.

சில குறிப்புகள்:
  • இளம் பார்வையாளர்களுக்காக உருவாக்கப்படுகின்ற வீடியோக்களைக் கண்டறிய உதவுவதற்காக நாங்கள் மெஷின் லேர்னிங்கைப் பயன்படுத்துகிறோம். உங்கள் பார்வையாளர்களைச் சரியாக அமைப்பீர்கள் என நம்புகிறோம். ஆனால் ஏதேனும் பிழையோ தவறான பயன்பாடோ இருந்தால் உங்கள் பார்வையாளர் அமைப்புக்கான விருப்பத்தேர்வை நாங்கள் மாற்றக்கூடும்.
  • உங்கள் பார்வையாளர்களை அமைக்க எங்கள் சிஸ்டங்களை நம்பியிருக்க வேண்டாம். ஏனெனில் FTC அல்லது பிற அங்கீகார அமைப்புகள் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகக் கருதும் வீடியோவை எங்கள் சிஸ்டங்களால் அடையாளங்காண முடியாமல் போகக்கூடும்.
  • உங்கள் வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா இல்லையா என்பதைக் கண்டறிவதில் உதவி தேவைப்பட்டால் இந்த உதவி மையக் கட்டுரையைப் பார்க்கவும் அல்லது சட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
  • “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை” என நீங்கள் அமைத்த வீடியோக்கள் சிறுவர்களுக்கான பிற வீடியோக்களுடனேயே அதிகமாகப் பரிந்துரைக்கப்படும்.
  • உங்கள் வீடியோவில் நீங்கள் ஏற்கெனவே அமைத்திருந்த பார்வையாளர்கள் அமைப்பில் பிழையோ தவறான பயன்பாடோ இருப்பதை YouTube கண்டறிந்தால் "சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை என அமைக்கப்பட்டது" என்று உங்கள் வீடியோ அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். உங்கள் பார்வையாளர் அமைப்பை உங்களால் மாற்ற முடியாது. நாங்கள் தவறுசெய்திருப்பதாக நீங்கள் கருதினால் மறுபரிசீலனை செய்யக் கேட்கலாம்.

உங்கள் சேனலுக்கான பார்வையாளர்களை அமைத்தல்

சேனல் அமைப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் வேலையை எளிதாக்கலாம். இந்த அமைப்பு ஏற்கெனவே உள்ள வீடியோக்களுக்கும் புதிதாகப் பதிவேற்றப்படும் வீடியோக்களுக்கும் பயன்படுத்தப்படும். சேனல் அமைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை எனில் உங்கள் சேனலிலுள்ள ஒவ்வொரு வீடியோவிற்கும் 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா' என்பதை நீங்கள் தேர்வுசெய்ய வேண்டியிருக்கும். தனித்தனி வீடியோக்களுக்கான அமைப்புகள் சேனல் அமைப்பை மீறிச் செயல்படும்.
அத்துடன், இது உங்கள் சேனலில் சில அம்சங்களைக் கட்டுப்படுத்தும். உங்கள் வீடியோக்கள் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவையா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை எனில் இந்த உதவி மையக் கட்டுரையைப் பாருங்கள்.
  1. studio.youtube.com தளத்தில் உள்நுழையவும் (இணைய ஸ்டுடியோவில் மட்டும்).
  2. இடதுபுற மெனுவில் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சேனல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மேம்பட்ட அமைப்புகள் பிரிவைக் கிளிக் செய்யவும். 
  5. பார்வையாளர்கள் என்பதன் கீழ், இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
    1. “ஆம். இந்தச் சேனல் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என அமை. சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோக்களையே எப்போதும் பதிவேற்றுகிறேன்.” 
    2. “இல்லை. இந்தச் சேனல் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல என்று அமை. சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோக்களை நான் ஒருபோதும் பதிவேற்றுவதில்லை.”
    3. “ஒவ்வொரு வீடியோவுக்கும் இந்த அமைப்பைச் சரிபார்க்க விரும்புகிறேன்.” 
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் வீடியோவுக்கான பார்வையாளர்களை அமைத்தல்
தனித்தனி வீடியோக்களை 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது' என அமைக்கலாம். உங்களுடைய சில வீடியோக்கள் மட்டும் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவையாக இருந்தால் இந்த விருப்பத்தைப் பயன்படுத்துவது சிறந்த வழியாகும். உங்கள் வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை எனில் இந்த உதவி மையக் கட்டுரையைப் பாருங்கள். 

பதிவேற்றத்தின்போது உங்கள் பார்வையாளர்களை அமைத்தல்

  1. studio.youtube.com தளத்திற்குச் செல்லவும். கவனத்திற்கு: உங்கள் பார்வையாளர்கள் அமைப்பை 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது' என அமைக்க, நீங்கள் YouTube Studioவைப் பயன்படுத்த வேண்டும். Creator Studio கிளாசிக்கில் அதைச் செய்ய முடியாது. 
  2. மேல் வலதுபுற மூலையிலுள்ள பதிவேற்ற ஐகானைக் கிளிக் செய்யவும். 
  3. வீடியோவைப் பதிவேற்று (பீட்டா) என்பதைக் கிளிக் செய்யவும். இதைப் பார்க்கவில்லை எனில், வீடியோவைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அடிப்படைத் தகவல் பிரிவில், பார்வையாளர்கள் என்பதற்கு நகர்த்தவும். 
  5. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
    • “ஆம். இது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது".
    • “இல்லை. இது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல"
  6. அடுத்து என்பதைக் கிளிக் செய்து, தொடர்ந்து உங்கள் வீடியோவைப் பதிவேற்றவும். 

வீடியோவைப் பதிவேற்றிய பிறகு, உங்கள் பதிவேற்றங்கள் பட்டியலில் “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது - நீங்கள் அமைத்தது” என அதற்கு லேபிளிடப்படும். 

ஏற்கெனவே உள்ள வீடியோக்களில் பார்வையாளர்கள் அமைப்பை மாற்றுதல்

ஏற்கெனவே சில வீடியோக்களை “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என YouTube அமைத்திருப்பதை நீங்கள் பார்க்கக்கூடும். உங்கள் வீடியோக்களையோ சேனலையோ 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது' என்றோ 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல' என்றோ அமைக்கும் வாய்ப்பு உங்களுக்கு இதுவரை கிடைக்காததால், இப்போது நீங்கள் இதைச் செய்ய முடியும்:

  1. studio.youtube.com தளத்தில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் வீடியோக்களுக்கு அடுத்துள்ள பெட்டிகளைத் தேர்வுசெய்யவும். கவனத்திற்கு: பட்டியலின் மேலே உள்ள “வீடியோ” என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்வதன் மூலம் உங்கள் அனைத்து வீடியோக்களையும் தேர்ந்தெடுக்கலாம். 
  4. மாற்று அதன் பிறகு பார்வையாளர்கள் அதன் பிறகு “ஆம். இது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. வீடியோக்களைப் புதுப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சில குறிப்புகள்: 
  • இளம் பார்வையாளர்களுக்காக உருவாக்கப்படுகின்ற வீடியோக்களைக் கண்டறிய உதவுவதற்காக நாங்கள் மெஷின் லேர்னிங்கைப் பயன்படுத்துகிறோம். உங்கள் பார்வையாளர்களை நீங்கள் சரியாக அமைப்பீர்கள் என நம்புகிறோம். இருந்தாலும் ஏதேனும் பிழையோ தவறான பயன்பாடோ ஏற்படும் சூழல்களில் உங்கள் பார்வையாளர்கள் அமைப்பை நாங்கள் மாற்றியமைக்கக்கூடும். 
  • உங்கள் பார்வையாளர்களை அமைக்க எங்கள் சிஸ்டங்களை நம்பியிருக்க வேண்டாம். ஏனெனில் FTC அல்லது பிற அங்கீகார அமைப்புகள் 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது' எனக் கருதும் வீடியோவை எங்கள் சிஸ்டங்களால் அடையாளம் காண முடியாமல் போகக்கூடும். 
  • உங்கள் வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் உதவி தேவைப்பட்டால் இந்த உதவி மையக் கட்டுரையைப் பாருங்கள் அல்லது சட்ட ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள்.
  • “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என நீங்கள் அமைத்த வீடியோக்கள் சிறுவர்களுக்கான பிற வீடியோக்களுடனேயே அதிகமாகப் பரிந்துரைக்கப்படும். 
  • உங்கள் வீடியோவில் நீங்கள் ஏற்கெனவே அமைத்திருந்த பார்வையாளர்கள் அமைப்பில் பிழையோ தவறான பயன்பாடோ இருப்பதை YouTube கண்டறிந்தால் "சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என அமைக்கப்பட்டது" என்று உங்கள் வீடியோ அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். உங்கள் பார்வையாளர் அமைப்பை உங்களால் மாற்ற முடியாது. எங்கள் முடிவு தவறானது என நீங்கள் கருதினால் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்கலாம்.

உங்கள் லைவ் ஸ்ட்ரீமிற்கான பார்வையாளர்களை அமைத்தல்

லைவ் ஸ்ட்ரீமை உருவாக்கும்போது உங்கள் பார்வையாளர்களை அமைத்தல்

உங்கள் வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை எனில் இந்த உதவி மையக் கட்டுரையைப் பாருங்கள். 

  1. studio.youtube.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுற மூலையிலுள்ள பதிவேற்ற ஐகானைக் கிளிக் செய்யவும்.
  3. நேரலைக்குச் செல் என்பதைக் கிளிக் செய்யவும். கவனத்திற்கு: இதைக் கிளிக் செய்தால் நேரலைக் கட்டுப்பாட்டு அறை காட்டப்படும். எங்கள் கிளாசிக் லைவ் ஸ்ட்ரீமிங் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் லைவ் ஸ்ட்ரீமின் பார்வையாளர்களை அமைக்க முடியாது. எனவே அதற்கு நீங்கள் நேரலைக் கட்டுப்பாட்டு அறையைப் பயன்படுத்த வேண்டும்.
  4. அடிப்படைத் தகவல்களை நிரப்பி பார்வையாளர் அனுமதி அமைப்பைத் தேர்ந்தெடுத்த பிறகு, பார்வையாளர்கள் என்பதற்கு நகர்த்தவும். 
  5. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
    • “ஆம். இது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது”.
    • “இல்லை. இது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல”.
  6. அடுத்து என்பதைக் கிளிக் செய்து, உங்கள் லைவ் ஸ்ட்ரீமைத் தொடர்ந்து அமைக்கவும்.

காப்பிடப்பட்ட லைவ் ஸ்ட்ரீம்களில் பார்வையாளர்கள் அமைப்பை மாற்றுதல்

ஏற்கெனவே சில காப்பிடப்பட்ட லைவ் ஸ்ட்ரீம்களை “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என YouTube அமைத்திருப்பதை நீங்கள் பார்க்கக்கூடும். காப்பிடப்பட்ட உங்கள் லைவ் ஸ்ட்ரீம்களை 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது' என்றோ 'சிறுவர்களுக்காக உருவாக்கப்படாதது' என்றோ அமைக்கும் வாய்ப்பு உங்களுக்கு இதுவரை கிடைக்காததால், இப்போது நீங்கள் இதைச் செய்ய முடியும்:

  1. studio.youtube.com தளத்தில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நேரலை பிரிவைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் வீடியோக்களுக்கு அடுத்துள்ள பெட்டிகளைத் தேர்வுசெய்யவும். கவனத்திற்கு: பட்டியலின் மேலே உள்ள “லைவ் ஸ்ட்ரீம்” என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்வதன் மூலம் உங்கள் அனைத்து வீடியோக்களையும் தேர்ந்தெடுக்கலாம். 
  5. மாற்று அதன் பிறகு பார்வையாளர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து அதன் பிறகு சிறுவர்களுக்கான உள்ளடக்கமாக இருந்தால் “ஆம். இது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சிறுவர்களுக்கான உள்ளடக்கம் இல்லை எனில் “இல்லை. இது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. வீடியோக்களைப் புதுப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சில குறிப்புகள்
  • இளம் பார்வையாளர்களுக்காக உருவாக்கப்படுகின்ற வீடியோக்களைக் கண்டறிய உதவுவதற்காக நாங்கள் மெஷின் லேர்னிங்கைப் பயன்படுத்துகிறோம். உங்கள் பார்வையாளர்களை நீங்கள் சரியாக அமைப்பீர்கள் என நம்புகிறோம். இருந்தாலும் ஏதேனும் பிழையோ தவறான பயன்பாடோ ஏற்படும் சூழல்களில் உங்கள் பார்வையாளர்கள் அமைப்பை நாங்கள் மாற்றியமைக்கக்கூடும். 
  • உங்கள் பார்வையாளர்களை அமைக்க எங்கள் சிஸ்டங்களை நம்பியிருக்க வேண்டாம். ஏனெனில் FTC அல்லது பிற அங்கீகார அமைப்புகள் 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது' எனக் கருதும் வீடியோவை எங்கள் சிஸ்டங்களால் அடையாளம் காண முடியாமல் போகக்கூடும். 
  • உங்கள் வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா இல்லையா என்பதைக் கண்டறிவதில் உதவி தேவைப்பட்டால் இந்த உதவி மையக் கட்டுரையைப் பார்க்கவும் அல்லது சட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
  • “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை” என நீங்கள் அமைத்த வீடியோக்கள் அதிகமாகச் சிறுவர்களுக்கான பிற வீடியோக்களுடன் பரிந்துரைக்கப்படும்.
  • உங்கள் வீடியோவில் நீங்கள் ஏற்கெனவே அமைத்திருந்த பார்வையாளர்கள் அமைப்பில் பிழையோ தவறான பயன்பாடோ இருப்பதை YouTube கண்டறிந்தால் "சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என அமைக்கப்பட்டது" என்று உங்கள் வீடியோ அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். உங்கள் பார்வையாளர் அமைப்பை உங்களால் மாற்ற முடியாது. எங்கள் முடிவு தவறானது என நீங்கள் கருதினால் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்கலாம்.

உங்கள் வீடியோ 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை' என அமைக்கப்பட்டால் என்ன ஆகும்?

சட்டத்துடன் இணங்குவதற்காக, சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோக்களின் உபயோகத்தையும் தரவுச் சேகரிப்பையும் நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். அதாவது கருத்துகள், அறிவிப்புகள் போன்ற சில அம்சங்களை நாங்கள் கட்டுப்படுத்தவோ முடக்கவோ வேண்டும்.

மிக முக்கியமாக, சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (COPPA) மற்றும்/அல்லது பிற பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க, சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோவில் பிரத்தியேக விளம்பரங்களை நாங்கள் வழங்குவதில்லை. சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோவில் பிரத்தியேக விளம்பரங்கள் வழங்கப்படாமல் இருப்பது, சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகத் தங்களது வீடியோவை அமைக்கும் சில கிரியேட்டர்களின் வருவாயைக் குறைக்கக்கூடும். சில கிரியேட்டர்களுக்கு இது எளிதாக இருக்காது என்பதை நாங்கள் அறிவோம், இருந்தாலும் COPPA மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டங்களுக்கு இணங்குவதை உறுதிசெய்வதற்காகவே இந்த முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

முடக்கப்பட்ட அம்சங்களின் பட்டியலுக்கு, கீழுள்ளவற்றைப் பார்க்கவும்:

ஒரு வீடியோ அல்லது லைவ் ஸ்ட்ரீமை சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை என அமைத்தால்

உங்கள் பார்வையாளர்கள் அமைப்பில் “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை” என நீங்கள் அமைத்திருந்தால் சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்துடனும் (COPPA) பொருந்தக்கூடிய பிற சட்டங்களுடனும் இணங்குவதற்காக, சில அம்சங்களைக் கட்டுப்படுத்துவோம். இது நடக்கும்போது ஒவ்வொரு வீடியோவிலும் லைவ் ஸ்ட்ரீமிலும் இந்த அம்சங்கள் கிடைக்காது:

  • முகப்புப்பக்கத்தில் வீடியோக்களைத் தானாக இயக்குதல்
  • கார்டுகள் அல்லது இறுதித் திரைகள்
  • வீடியோ வாட்டர்மார்க்குகள்
  • சேனல் மெம்பர்ஷிப்கள்
  • கருத்துகள்
  • நன்கொடை பட்டன்
  • YouTube Musicகில் விருப்பங்கள் மற்றும் விருப்பமின்மைகள்
  • நேரலை அரட்டை அல்லது நேரலை அரட்டையில் நன்கொடை பெறுதல்
  • விற்பனைப் பொருட்கள் மற்றும் டிக்கெட் விற்பனை
  • அறிவிப்பு மணி
  • பிரத்தியேக விளம்பரங்கள்
  • மினிபிளேயரில் வீடியோவை இயக்குதல்
  • Super Chat அல்லது Super Stickers
  • பிளேலிஸ்ட்டில் சேமித்தல் மற்றும் பிறகு பார்ப்பதற்குச் சேமித்தல்
உங்கள் சேனலைச் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை என அமைத்திருந்தால்

உங்கள் சேனல் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை என அமைக்கப்பட்டிருந்தால், உங்கள் வீடியோக்களிலோ லைவ் ஸ்ட்ரீம்களிலோ மேற்கூறிய அம்சங்கள் எதுவும் இருக்காது. உங்கள் சேனலில் இவையும் இருக்காது: 

  • சேனல் மெம்பர்ஷிப்கள்
  • அறிவிப்பு மணி
  • இடுகைகள்

பொதுவான கேள்விகள்

'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை' என அமைக்கப்பட்ட வீடியோவில் அறிவிப்புகள், கருத்துகள் மற்றும் பிற அம்சங்கள் முடக்கப்படுவது ஏன்?

சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்துடனும் (COPPA) பொருந்தக்கூடிய பிற சட்டங்களுடனும் இணங்குவதற்காக, சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோவில் தரவுச் சேகரிப்பை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். இதன் விளைவாக இந்த வீடியோவில் சில அம்சங்கள் (அறிவிப்புகள், கருத்துகள் உட்பட) கட்டுப்படுத்தப்படக்கூடும் அல்லது முடக்கப்படக்கூடும்.

என்னுடைய வீடியோவுக்கான பார்வையாளர்களை நான் தவறாக அமைத்தால் என்ன ஆகும்?

அமெரிக்க ஃபெடரல் டிரேடு கமிஷன் (FTC - Federal Trade Commission) மற்றும் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் உடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அத்துடன் சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (COPPA - Children’s Online Privacy Protection Act) மற்றும்/அல்லது பொருந்தக்கூடிய பிற சட்டங்களுடன் நீங்கள் இணங்குவதற்கும் இவை உதவும். நீங்கள் எந்த இடத்தில் வசித்தாலும் உங்கள் வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா இல்லையா என்பதை எங்களிடம் தெரிவிப்பது அவசியம். உங்கள் பார்வையாளர்களைச் சரியாக அமைக்கத் தவறினால் FTC அல்லது பிற அமைப்புகளுடன் இணங்குவதில் சிக்கல் ஏற்படக்கூடும். இதன் காரணமாக உங்கள் YouTube கணக்கின் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கக்கூடும். FTCயின் COPPA அமலாக்கம் குறித்து மேலும் அறிக.

கவனத்திற்கு: இளம் பார்வையாளர்களுக்காக உருவாக்கப்படுகின்ற வீடியோக்களை அடையாளம் காண நாங்கள் மெஷின் லேர்னிங்கையும் பயன்படுத்துவோம். உங்கள் பார்வையாளர்களைச் சரியாக அமைப்பீர்கள் என நம்புகிறோம். ஆனால் ஏதேனும் பிழையோ தவறான பயன்பாடோ இருந்தால் உங்கள் பார்வையாளர் அமைப்புக்கான விருப்பத்தேர்வை நாங்கள் மாற்றக்கூடும். உங்கள் பார்வையாளர்களை அமைக்க எங்கள் சிஸ்டங்களை நம்பியிருக்க வேண்டாம். ஏனெனில் FTC அல்லது பிற அங்கீகார அமைப்புகள் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகக் கருதும் வீடியோவை எங்கள் சிஸ்டங்களால் அடையாளம் காண முடியாமல் போகக்கூடும். உங்கள் பார்வையாளர்கள் அமைப்பை 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை' எனச் சரியாக அமைக்கவில்லை எனில் YouTubeல் பின்விளைவுகளையோ சட்டரீதியான பின்விளைவுகளையோ நீங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா இல்லையா என்பதைக் கண்டறிவதில் உதவி தேவைப்பட்டால் இந்த உதவி மையக் கட்டுரையைப் பார்க்கவும் அல்லது சட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.

எனது வீடியோவின் பார்வையாளர்களை நான் சரியாக அமைத்துள்ளேன் என்று எப்படித் தெரிந்துகொள்வது?

உங்கள் பார்வையாளர்கள் அமைப்பை 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை' எனத் துல்லியமாக அமைத்துள்ளீர்களா என்பதைக் கண்டறிவதற்கான வழிகாட்டுதலை எங்களால் வழங்க முடியவில்லை. ஆனால் சிறுவர்களை மையப்படுத்திய வீடியோ (அல்லது “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை”) என்றால் என்ன என்பது குறித்து FTC சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. COPPAவில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய FTC தற்போது பரிசீலித்து வருகிறது. அதில் இந்தச் சிக்கல் தொடர்பான கூடுதல் வழிகாட்டுதல் வழங்கப்படலாம்.

சிறுவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட வீடியோக்களைக் கண்டறிய மெஷின் லேர்னிங் சிஸ்டங்களையும் பயன்படுத்துவோம். இருப்பினும் உங்கள் வீடியோக்களை அமைக்க எங்களின் சிஸ்டங்களையே நம்பியிருக்க வேண்டாம், ஏனெனில் அனைத்துத் தானியங்கு சிஸ்டங்களையும் போல் இவையும் துல்லியமானவை அல்ல. பிழையோ தவறான பயன்பாடோ இருப்பதைக் கண்டறிந்தால் உங்கள் பார்வையாளர் அமைப்புக்கான விருப்பத்தேர்வை நாங்கள் மாற்ற வேண்டியிருக்கும். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, உங்கள் பார்வையாளர் அமைப்பையே நாங்கள் நம்பியிருப்போம்.

உங்கள் பார்வையாளர்கள் அமைப்பை 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை' என அமைக்காமல் இருந்து, FTC அல்லது பிற அங்கீகார அமைப்புகள் அவ்வாறு அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று கருதினால் சட்டரீதியான பின்விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்கள் வீடியோவை 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை' என அமைக்க வேண்டுமா இல்லையா என்று இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை எனில் இந்த உதவி மையக் கட்டுரையைப் பார்க்கவும் அல்லது சட்ட ஆலோசகரின் உதவியைப் பெறவும்.

எனது வீடியோ சிறுவர்களுக்கானது என YouTube கூறுவதை நான் மறுக்கிறேன் என்றால் என்ன செய்வது?

உங்கள் வீடியோவுக்கான பார்வையாளர்களை நீங்கள் இன்னும் அமைக்கவில்லை எனில்: பார்வையாளர்களை YouTube அமைக்கக்கூடும். COPPA மற்றும்/அல்லது பொருந்தக்கூடிய பிற சட்டங்களுடன் இணங்குவதில் உங்களுக்கு உதவ இவ்வாறு செய்யப்படுகிறது. இருப்பினும் YouTube அமைத்த வீடியோ வகையை நீங்கள் ஏற்கவில்லையெனில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வீடியோவின் பார்வையாளர் அமைப்பை நீங்களே மாற்றிக்கொள்ள முடியும்.

உங்கள் வீடியோவிற்கான பார்வையாளர்களை ஏற்கெனவே அமைத்திருந்தால்: அதில் பிழையோ தவறான பயன்பாடோ இருப்பதை YouTube கண்டறிந்தால் “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை என அமைக்கப்பட்டது” என்று உங்கள் வீடியோவின் அமைப்பு மாற்றப்பட்டிருக்கக்கூடும். இப்படி இருக்கும்போது உங்கள் பார்வையாளர் அமைப்பை நீங்கள் மாற்ற முடியாது.

இருப்பினும், சில சமயங்களில் எங்கள் தரப்பிலும் தவறுகள் ஏற்படக்கூடும் என்பதைப் புரிந்துகொள்கிறோம். தவறுதலாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நீங்கள் கருதினால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்கலாம்.

 கம்ப்யூட்டரில் மறுபரிசீலனைக்குச் சமர்ப்பிக்க:

  1. கம்ப்யூட்டரில் studio.youtube.com தளத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் மறுபரிசீலனை செய்யக் கேட்க விரும்பும் வீடியோவுக்குச் செல்லவும்.
  4. “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை என அமைக்கப்பட்டது” என்பதற்கு மேல் கர்சரைக் கொண்டு சென்று மறுபரிசீலனை என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. மறுபரிசீலனைக்கான காரணத்தை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைலில் மறுபரிசீலனைக்குக் கேட்க:

  1. YouTube Studio ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மெனு அதன் பிறகு வீடியோக்கள் என்பதைத் தட்டவும்.
  3. பதிவேற்றங்கள் பிரிவில், நீங்கள் மறுபரிசீலனை செய்வதற்குக் கேட்க விரும்பும் வீடியோவைத் தட்டவும்.
  4. கட்டுப்பாடுகள் என்பதன் கீழ் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை என அமைக்கப்பட்டது என்பதைத் தட்டவும்.
  5. மறுபரிசீலனைக்குக் கேள் என்பதைத் தட்டி மறுபரிசீலனைக்கான காரணத்தை உள்ளிடவும்.
  6. சமர்ப்பி என்பதைத் தட்டவும்.

மறுபரிசீலனைக்குச் சமர்ப்பித்த பிறகு

மறுபரிசீலனைக் கோரிக்கைக்கான முடிவை YouTube உங்களுக்குத் தெரிவிக்கும் விதமாக ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள். இவற்றில் ஏதாவது ஒன்று நடக்கும்:

  • உங்கள் மறுபரிசீலனைக் கோரிக்கை ஏற்கப்பட்டால், சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை எனும் பார்வையாளர் அமைப்பை அகற்றுவோம்.
  • உங்கள் மறுபரிசீலனைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை எனும் பார்வையாளர் அமைப்பு உங்கள் வீடியோவில் அப்படியே இருக்கும். இனி உங்கள் சேனல் மற்றும்/அல்லது ஒவ்வொரு வீடியோவுக்கான பார்வையாளர் அமைப்புகளை மதிப்பாய்வு செய்யுங்கள். உங்கள் பார்வையாளர்களைச் சரியாக அமைக்கத் தவறினால் COPPA மற்றும்/அல்லது பிற சட்டங்களின் கீழ் சட்டரீதியான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம் அல்லது YouTube தளத்தில் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.

ஒரு வீடியோவை ஒருமுறை மட்டுமே மறுபரிசீலனை செய்யக் கேட்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9096677109337338643
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false