உங்கள் வீடியோ "சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா" என்பதைத் தீர்மானித்தல்

நீங்கள் எங்கிருந்தாலும் அமெரிக்க ஃபெடரல் டிரேடு கமிஷனுடனான (FTC) ஒப்பந்தத்தின்படியும் சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (Children’s Online Privacy Protection Act - COPPA) மற்றும்/அல்லது பிற பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு நீங்கள் இணங்க உதவுவதற்காகவும் உங்கள் வீடியோக்கள் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவையா இல்லையா என்பதை நீங்கள் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உங்கள் பார்வையாளர்களைச் சரியாக அமைக்கத் தவறினால் YouTube தளத்தில் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம் அல்லது COPPA மற்றும் பிற சட்டங்களின் கீழ் சட்டப்பூர்வப் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.

எந்த வீடியோக்களை எல்லாம் “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” எனக் கருதலாம் என்பதற்கான சில வழிகாட்டுதல்களைக் கீழே வழங்கியுள்ளோம். ஆனால் எங்களால் சட்ட ஆலோசனையை வழங்க முடியாது. உங்கள் வீடியோக்கள் இந்தத் தரநிலையைப் பூர்த்திசெய்கின்றனவா என்பது உறுதியாகத் தெரியவில்லை எனில் சட்ட ஆலோசகரிடம் உதவி பெறுமாறு பரிந்துரைக்கிறோம்.

குறிப்பு: தாங்கள் உருவாக்கிய வீடியோ “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா” இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் YouTube கிரியேட்டர்களுக்கு உதவ, நவம்பர் 2019ல் FTC கூடுதல் தகவல்களை வெளியிட்டது. FTC வலைப்பதிவில் இது குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம்.

 சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை  சிறுவர்களுக்காக உருவாக்கப்படாதவை

சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் வீடியோக்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

  • சிறுவர்கள் முதன்மைப் பார்வையாளர்களாக இருக்கும் வீடியோ.
  • சிறுவர்கள் முதன்மைப் பார்வையாளர்கள் இல்லை. ஆனால் வீடியோ சிறுவர்களை மையப்படுத்தி இருக்கும். ஏனெனில் நடிகர்கள், கதாபாத்திரங்கள், செயல்பாடுகள், கேம்கள், பாடல்கள், கதைகள், பிற முக்கிய விவரங்கள் போன்றவை சிறுவர்களை ஈர்க்கக்கூடிய நோக்கத்துடன் இருப்பதைப் பிரதிபலிக்கும்.

கூடுதல் வழிகாட்டுதல்களுக்குக் கீழே பார்க்கவும்.

சிறுவர்களுக்காக உருவாக்கப்படாதவை எனக் கருதப்படும் வீடியோக்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

  • பாலியல் உள்ளடக்கம், வன்முறை, ஆபாசம், இளம் பார்வையாளர்களுக்குத் தகாத பிற உள்ளடக்கம் (பெரியவர்களுக்கானவை) போன்றவற்றைக் கொண்ட வீடியோ.
  • 18 வயதிற்குட்பட்ட பார்வையாளர்களுக்குத் தகாத, வயதுக் கட்டுப்பாடுள்ள வீடியோக்கள்.

கூடுதல் வழிகாட்டுதல்களுக்குக் கீழே பார்க்கவும்.

 

எனது வீடியோவைச் 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது' என அமைக்க வேண்டுமா என்று நான் எப்படித் தெரிந்துகொள்வது?
உங்கள் வீடியோவில் உள்ள நடிகர்கள், கதாபாத்திரங்கள், செயல்பாடுகள், கேம்கள், பாடல்கள், கதைகள், பிற முக்கிய விவரங்கள் போன்றவை சிறுவர்களை ஈர்க்கக்கூடிய நோக்கத்துடன் இருப்பதைப் பிரதிபலித்தால் அது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். COPPAவில் உள்ள FTCயின் வழிகாட்டுதலின்படி வீடியோ இவ்வாறு இருக்குமேயானால் அது சிறுவர்களுக்கானது (“சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என அழைக்கப்படும்):
  • கீழுள்ள காரணிகளின் அடிப்படையில் சிறுவர்கள் முதன்மைப் பார்வையாளர்களாக இருக்கும் வீடியோ. 
  • சிறுவர்கள் முதன்மைப் பார்வையாளர்கள் இல்லை, எனினும் கீழுள்ள காரணிகளின் அடிப்படையில் சிறுவர்களை மையப்படுத்தி இருக்கும் வீடியோ. (இது COPPAவின் கீழ் “எல்லோருக்கும் ஏற்ற” வீடியோ என அழைக்கப்படுகிறது, இது சிறுவர்களுக்கான வீடியோவின் ஒரு வகையாகும். பொதுப் பார்வையாளர்களுக்கு ஏற்ற வீடியோவும் எல்லோருக்கும் ஏற்ற வீடியோவும் ஒன்றல்ல.)

உங்கள் வீடியோவோ சேனலோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்போது நீங்கள் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும், அவை பின்வருமாறு:

  • வீடியோவின் முக்கிய விவரங்கள் (எ.கா. மழலையருக்கான கல்வி சார்ந்த வீடியோ).
  • வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா (எ.கா. உங்கள் வீடியோவின் தரவுத்தகவலில் குறிப்பிட்டுள்ளது) அல்லது சிறுவர்களால் அதிகம் பார்க்கப்படுகிறதா?
  • வீடியோவில் குழந்தை நட்சத்திரங்கள் அல்லது மாடல்கள் இருக்கிறார்களா?
  • சிறுவர்களை ஈர்க்கக்கூடிய கதாபாத்திரங்கள், பிரபலங்கள், பொம்மைகள் போன்றவை (எ.கா. அனிமேஷன் கதாபாத்திரங்கள், கார்ட்டூன்கள்) வீடியோவில் உள்ளனவா?
  • வீடியோவின் மொழி சிறுவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளதா?
  • வீடியோவில் சிறுவர்களை ஈர்க்கக்கூடிய செயல்பாடுகள் (நாடக நடிப்பு, எளிய பாடல்கள்/கேம்கள், ஆரம்பக் கல்வி போன்றவை) உள்ளனவா?
  • வீடியோவில் சிறுவர்களுக்கான பாடல்கள், கதைகள், கவிதைகள் போன்றவை உள்ளனவா?
  • உங்கள் வீடியோவின் பார்வையாளர்களைத் தீர்மானிக்க உதவும் வேறு ஏதேனும் தகவல்கள் (வீடியோவின் பார்வையாளர்களின் அனுபவச் சான்றுகள் போன்றவை).
  • வீடியோவானது சிறுவர்களுக்கு விளம்பரம் செய்யப்படுகிறதா?. 

குறிப்புகள்:

  • உங்கள் வீடியோவில் இந்தக் காரணிகளில் சில இருப்பதால் மட்டுமே இது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என்று அர்த்தமாகாது. உங்கள் வீடியோவையும் மேலே உள்ள காரணிகளையும் மதிப்பீடு செய்யும்போது உங்கள் வீடியோக்கள் எந்த வகையான பார்வையாளர்களுக்கானவை என்பதைக் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • உங்கள் வீடியோ சிறுவர்களுக்கானதா என்பதைத் தீர்மானிக்க உதவும் வகையில் YouTube பகுப்பாய்வுகள் (YTA) வடிவமைக்கப்படவில்லை. உங்கள் பார்வையாளர்களை அமைப்பதற்கு, மேலே FTC வழங்கியுள்ள காரணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என நீங்கள் அமைத்த வீடியோக்கள் சிறுவர்களுக்கான பிற வீடியோக்களுடனேயே அதிகமாகப் பரிந்துரைக்கப்படும். சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோ தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்க்கவும்.  
முக்கியமானது: ஒரு கிரியேட்டராக உங்கள் வீடியோக்களையும் பார்வையாளர்களையும் நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். COPPA மற்றும்/அல்லது பொருந்தக்கூடிய பிற சட்டங்களுடன் இணங்குவதும் உங்கள் வீடியோக்களைத் துல்லியமாகக் குறிப்பிடுவதும் உங்கள் சட்டப் பொறுப்பாகும். உங்கள் பார்வையாளர்களை அமைக்க எங்கள் சிஸ்டங்களை நம்பியிருக்க வேண்டாம். ஏனெனில் FTC அல்லது பிற அங்கீகார அமைப்புகள் 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது' எனக் கருதும் வீடியோவை எங்கள் சிஸ்டங்களால் அடையாளங்காண முடியாமல் போகக்கூடும். உங்கள் வீடியோவைச் சரியாக வகைப்படுத்தவில்லை எனில் YouTubeல் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். அத்துடன் சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (COPPA) அல்லது பொருந்தக்கூடிய பிற சட்டங்களின் கீழ் சட்டப்பூர்வப் பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம். 
எனது வீடியோவைச் 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல' என அமைக்க வேண்டுமா என்று நான் எப்படித் தெரிந்துகொள்வது?
உங்கள் வீடியோக்களை மதிப்பீடு செய்யும்போது அவை எந்த வகையான பார்வையாளர்களுக்கானவை என்பதைக் கவனமாகக் கருத்தில் கொள்ளவும். உதாரணமாக, ஒரு வீடியோ இவ்வாறு இருப்பதால் மட்டுமே அது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாகாது:
  • அனைவரும் பார்ப்பதற்கேற்றது அல்லது பாதுகாப்பானது (அதாவது “குடும்பத்திற்கேற்ற வீடியோ”).
  • பொதுவாகச் சிறுவர்களுடன் தொடர்புடைய செயல்பாட்டை உள்ளடக்கியது.
  • சிறுவர்கள் தற்செயலாகப் பார்க்கக்கூடியது. 

பொதுப் பார்வையாளர்களுக்கு ஏற்ற வீடியோ

பொதுப் பார்வையாளர்களுக்கு ஏற்ற வீடியோ என்பது அனைவரையும் ஈர்க்கக்கூடிய வீடியோவாகும். இது குறிப்பாகச் சிறுவர்களையோ டீன் ஏஜர்களையோ பெரியவர்களையோ மையப்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ அல்ல. பொதுப் பார்வையாளர்களுக்கு ஏற்ற வீடியோ “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல” என அமைக்கப்பட வேண்டும்.

சிறுவர்களை மையப்படுத்தி உள்ளதைப் பரிந்துரைக்கும் தகவல்கள் இல்லாத நிலையில் “பொதுப் பார்வையாளர்களுக்கானது” என்று கருதக்கூடிய வீடியோ வகைகளுக்கான எடுத்துக்காட்டுகள்:  

  • பொம்மைகளை ரீமேக் செய்வது, களிமண் உருவங்களை உருவாக்குவது போன்றவற்றைப் பொழுதுபோக்கு ஆர்வலர்களுக்குக் கற்பிக்கும் DIY வீடியோ
  • ஒரு பொழுதுபோக்குப் பூங்காவைச் சுற்றிப் பார்க்கும் அனுபவம் குறித்துப் பிற பெற்றோருக்குக் கூறும் குடும்ப வீடியோ பதிவு 
  • அவதார்களை உருவாக்குவது அல்லது வீடியோ கேமில் மாற்றங்களைச் செய்வது குறித்த விரிவான வழிமுறைகளைக் கொண்ட வீடியோ
  • அனைவரையும் ஈர்க்கக்கூடிய அனிமேஷன் வீடியோ
  • பெரியவர்களுக்கான நகைச்சுவை உள்ள கேமிங் வீடியோ

பொதுப் பார்வையாளர்களுக்கு ஏற்ற வீடியோவுக்கும் எல்லோருக்கும் ஏற்ற வீடியோவுக்கும் இடையேயான வேறுபாடு என்ன?

எல்லோருக்கும் ஏற்ற வீடியோவானது சிறுவர்களுக்கான வீடியோவின் ஒரு வகையாகவும் கருதப்படுகிறது. முதன்மை அல்லது பிரதானப் பார்வையாளர்களாகச் சிறுவர்கள் இல்லாதபோதிலும் இந்த வகை வீடியோக்கள் அதன் பார்வையாளர்களில் சிறுவர்களையும் இலக்கிடுகின்றன. மேலும் இவை மேலே விவரிக்கப்பட்டுள்ள காரணிகளைப் பூர்த்திசெய்து சிறுவர்களுக்கான வீடியோக்களாகத் தகுதிபெறுகின்றன.
 
கவனத்திற்கு: பாலியல் உள்ளடக்கம், வன்முறை, ஆபாசம், இளம் பார்வையாளர்களுக்குத் தகாத பிற உள்ளடக்கம் (பெரியவர்களுக்கானவை) போன்றவற்றைக் கொண்ட வீடியோக்கள் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்காது.

சிறுவர்களின் வயது வரம்பு என்ன?

13 வயதிற்குட்பட்ட எவரும் "சிறுவர்கள்" என அமெரிக்காவில் வரையறுக்கப்படுகிறது. எனினும் சிறுவர்களின் வயது பிற நாடுகளில் வேறாக இருக்கலாம். ஆகவே வீடியோ “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதா” என்பதை மதிப்பிடும்போது பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் இருக்கக்கூடிய கூடுதல் கட்டாயங்களைக் கருத்தில் கொள்ளுங்கள். கூடுதல் கேள்விகள் இருந்தால் சட்ட ஆலோசகரை அணுகுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12285032046978543258
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false